Latestமலேசியா

‘ஐசெர்ட்’ பேரணி; ஆதரவாளர்கள் காலையிலேயே திரள்கின்றனர்!

கோலாலம்பூர், டிசம்.8- பாஸ் கட்சியும் அம்னோவும் ஏற்பாடு செய்துள்ள ‘ஐசெர்ட்’ எதிர்ப்புப் பேரணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மக்கள் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து வாகனங்கள் மூலமாகவும் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாகவும் மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சோஹோ பேரங்காடியின் முன்னிலையிலும் பெரும் கூட்டமாக அவர்கள் திரண்டு வருகின்றனர்.

பிற்பகல் 2 மணியளவில் தொடங்கவிருக்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனப் பாகுபாடுகளை அகற்றுவது மீதான ஐநாவின் அனைத்துலக பிரகடனத்தை (ICERD) மலேசியா அங்கீகரிக்கக் கூடாது என்று கோரி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கெனவே இந்த ஐசெர்ட் பிரகடனத்தை மலேசியா அங்கீகரிப்பது ஒத்திவைக்கப்பட்டு விட்டதாக ஏற்கெனவே அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் டத்தாரான் மெர்டேக்காவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பேரணி ஆதரவாளர்கள் பலர் இப்போதே அங்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றும் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ஃபுஷி ஹருண் கூறினார். இந்தப் பேரணியைச் சமாளிக்க தாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து தயார் நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker