Latestமலேசியா

நெடுஞ்சாலையில் எதிர்த் திசையில் லோரி ஓட்டிய நபர் கைது! -(Video)

கோலாலம்பூர், டிசம். 08- சவுத் கிள்ளான் வேலி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையான SKVE சாலையில் போக்குவரத்துக்கு எதிரான திசையில் அரபாயகரமான முறையில் லோரியை ஓட்டிய ஓட்டுனர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Posted by Info Roadblock JPJ/POLIS on Friday, 7 December 2018

கோல லங்காட்டிற்கு அருகில் அந்த நெடுஞ்சாலையில் 27 ஆவது கிலோமீட்டரில் அந்த லோரி ஓட்டுனர் எதிர்த் திசையில் சென்றது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த லோரி ஓட்டுனர், தஞ்சோங் டுவா பிளாசில் ஓய்வெடுக்கும் பகுதியில் இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று சிலாங்கூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் ஆணையர் அஸ்மான் ஷாரி கூறினார்.

அந்த லோரி ஓட்டுனர் உடனடியாக சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டார். அவர் போதைப் பொருள் எதுவும் உட்கொண்டுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக இந்தச் சோதனை நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker