Latestமலேசியா

பேரணி: சீனர்கள் – இந்தியர்களுக்கு எதிரானது அல்ல! -பாஸ் துணைத்தலைவர்

கோலாலம்பூர், டிசம். 08- டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மாபெரும் ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் கூட்டத்தினர் மத்தியில் பேசிய பாஸ் கட்சி துணைத் தலைவர் தலைவர் துவான் இப்ராஹிம், மற்ற இனங்களைத் தாக்கிப் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மலாய்க்காரர்களின் உரிமை மற்றும் இஸ்லாம் சமயத்தை காக்கும் வகையில் பேசும் படி அவர் வலியுறுத்தினார்.

நாம் சீனர்களுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ எதிரானவர்களாக இங்கு திரளவில்லை சீனர்கள் மற்றும் இந்தியர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக நாம் இங்கு கூடவில்லை. நாம் நம்முடைய கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக கூடியுள்ளோம் என்று அவர் சொன்னார்.

தொடர்ந்து அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்ந்து சீரற்ற நிலையில் இருக்குமானால் அடுத்து நாம் புத்ராஜெயாவில் கூடுவோம். அதேவேளையில் நாட்டின் நிலைத்தனமைக்கும் நல்லெண்ணத்திற்கும் மிரட்டல் விடுக்கக் கூடாது என்று அவர் அனைத்து தரப்பினரையும் எச்சரித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker