Latestமலேசியா

ஜொகூர் மந்திரி புசாரைக் கவிழ்க்க சதியா? மறுத்தார் மொகிடின்!

ஜொகூர்பாரு, டிசம்.09- ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்படுவார் அல்லது கவிழ்க்கப்படுவார் என்று வெளியான தகவல்களை பிரிபூமி பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் நிராகரித்தார்.

மந்திரி புசார் என்ற முறையில் அவர் தம்மால் இயன்ற பணிகளைச் செய்துவருகிறார். எனவே கட்சி அவருக்கு ஆதரவாக இருந்து வரும். ஒவ்வொரு மந்திரி புசார்களுக்கும் அவரவர்களுக்கென சில சவால்கள் இருக்கவே செய்யும் என்று மொகிடின் குறிப்பிட்டார்.

ஜொகூர் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை நிலவவேண்டியது மிக அவசியம். அதேவேளையில் கட்சியைப் பொறுத்தவரை அது தனக்கென சில விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

மந்திரி புசார் பதவியில் இருந்து டத்தோ ஒஸ்மான் சாப்பியானை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக ஜொகூர் துங்கு மகோத்தா துங்கு இஸ்மாயில் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker