Latestமலேசியா

நாடாளுமன்றம் இனி ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல! -சபாநாயகர்

கோலாலம்பூர், டிசம்.09- முன்பு இருந்ததைப் போல நாடாளுமன்றம் என்பது வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல என்று மக்களவை சபாநாயகர் முகம்மட் அரீப் முகம்மட் யூசோப் வர்ணித்தார்.

இத்தகைய சூழல் தொடர்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாடாளுமன்ற சீர்திருத்த நடைமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும். நாடாளுமன்றம் மாண்பும் நேர்மைத் திறனும் கொண்ட ஓர் அமைப்பு. அது மக்களின் மதிப்பைப் பெற்றுத் திகழவேண்டும் என்று சபாநாயகர் முகம்மட் அரீப் சொன்னார்.

நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என மக்கள் கருதக் கூடாது. அது எப்போதும் சண்டை போடுகிற இடம் என்று அவர்கள் நினைக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் பல சீர்திருத்தங்கள் கடந்த 4 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

குறிப்பாக, பொது தணிக்கை குழு மேம்படுத்தப் படுகிறது. 6 சிறப்புத் தேர்வுக் குழுக்கள் அமைக்கபட்டுள்ளன. நாடாளுமன்றச் சேவைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன என்று முகம்மட் அரீப் விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker