Latestஉலகம்

வன்முறை போராட்டம்: பதட்டத்தில் பாரிஸ் நகரம்!

பாரிஸ், டிசம். 09- பிரான்ஸ், பாரிஸ் நகரில் மஞ்சள் சட்டை போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் எரிபொருள் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் துவங்கியது. மஞ்சள் சட்டை அணிந்து பலர் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தில் பெரும் வன்முறைகள் நடந்தன. கையில் ஆயுதங்கள் ஏந்திய இளைஞர்கள் பலர் பாரிஸ் தெருக்களில் இறங்கி வாகனங்களை சேதப்படுத்தினர்.

இதனால் வன்முறை மேலும் கட்டுக்கடங்காமல் சென்றது. இந்நிலையில் மீண்டும் பிரான்சில் போராட்டம் தொடங்குகிறது. என்று அரசுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது.

தற்போது கிடைத்த தகவலின்படி மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 481 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக கடந்த 1 ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 412 பேர் கைது செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker