Latestமலேசியா

கைதாகி 2 மணி நேரத்திலேயே நஜிப் விடுவிக்கப்பட்டார்!

புத்ராஜெயா,டிச.10- காலை 11 மணி அளவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பிற்பகல் 1.21 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்டதும் அவர் பிற்பகல் 1.40 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகடத்தில் இருந்து வெளியேறினார்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் தலையிட்டு சட்டவிரோதமாக அதில் சில மாற்றங்களை செய்தது தொடர்பில் அவர் இன்று காலையில் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று விடுவிக்கப்பட்டாலும் அவர் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் செக்‌ஷன் 23(1)-இன் கீழ் விசாரிக்கப்படுவார் என தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker