Latestமலேசியா

தஜுடின், பூங் மக்களவையிலிருந்து வெளியேற்றம்; தே.மு எம்பிக்கள் வெளிநடப்பு!

கோலாலம்பூர், டிச.10- பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ தஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் கினாபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ பூங் மொக்தார் ராடின் ஆகிய இருவரையும், துணை சபாநாயகர் டத்தோ முகமட் ரஷீட் ஹஸ்னோன் மக்களவையில் இருந்து வெளியேற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குறிக்கீடு செய்ய வேண்டாம் என்று துணை சபாநாயகர் தஜுடின் மற்றும் பூங் மொக்தாரை பல முறை அறிவுறுத்திய போதிலும், அவ்விருவரும் தொடர்ந்து வாதங்களை தொடுத்ததால், அவ்விருவரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுமாறு நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முகமட் ரஷீட் உத்தரவு பிறப்பித்தார்.

“நான் வெளியேற தயாராக இருந்த நிலையில், துணை சபாநாயகர் என்னை வெளியேற்றுவதற்காக அதிகாரிகளை அனுப்ப வேண்டிய அவசியமில்லை” என்று தஜுடின் செய்தியாளர்களிடம் சொன்னார்.

2018-ஆம் ஆண்டின் நிதி மசோதா குறித்த விவாதத்தை அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சான் மிங் காய் ஆரம்பிக்கும் வேளையில், கேமரன் மலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

அவரைக் கண்டதும், அவரை அவமதிக்கும் வகையில், கடந்த வாரம் ஜெலுத்தோங் எம்பி ராயர் நடந்துக் கொண்டார் என்றும், அதற்காக, அவர் சிவராஜ்ஜிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பூங் மொக்தார் குரல் எழுப்பினார்.

அவர் அவ்வாறு கூறியதும், பக்காத்தான் மற்றும் தேசிய முன்னணி எம்பிகள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. சிவராஜ்ஜிடம் மன்னிப்பு கோர ராயர் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்விவகாரம் தொடர்பில், சபாநாயகர் டத்தோ முகமட் அரீப்பின் முடிவு இறுதியானது என்றும், அது குறித்து மேலும் விவாதங்கள் வேண்டாம் என்றும் முகமட் ரஷீட் அறிவுறுத்தினார்.

நாடாளுமன்ற விவாதத்தில் குறுக்கீடு செய்ய வேண்டாம் என்று தஜுடின் மற்றும் பூங் மொக்தாரை முகமட் ரஷீட் வலியுறுத்தினார். ஆனால், அவ்விருவரும் தொடர்ந்து வாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker