Latestஉலகம்சினிமா

நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு!

சென்னை, டிச.10- ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்டது. நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் பேசினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட  படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, திரிஷா, மாளவிகா மேனன். ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிம்ரன் பேசியதாவது:- இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை தவறவிட்டுவிட்டேன். அதற்காக வருத்தப்பட்டேன். தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

“மீனா, குஷ்பு, சிம்ரன் மூன்று பேரில் ரஜினிக்கு யார் சரியான ஜோடி” என்று கேட்டதற்கு சிம்ரன் தான்! என்றார்.

திரிஷா பேசும் போது :- தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது. அவரிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். படப்படிப்புக்கு காலை 6 மணிக்கு வந்து விடுவார். என்னுடைய கனவை நனவாக்கிய கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி என்றார்,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker