Latestஇந்தியாஉலகம்சினிமா

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம்: விஜய் சேதுபதி

சென்னை, டிச.10- ரஜினியின் “பேட்ட” படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:-

நாம எல்லாரும் கனவு காணுறது வழக்கம் தான். ஆனால் நான் காணாத ஒரு கனவு நடந்தது. அது ரஜினியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது.

அவர் கூட நடித்ததே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால் அவரை பார்க்க நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போது வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கார்த்திக் சுப்புராஜ் ஷார்ட் பிலிம் பண்ணும் போதிலிருந்து அவரைத்  தெரியும். நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு. அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த படத்துலேயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கும். கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பார்.

பேட்ட படத்திலும் எல்லாம் இருக்கு. கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கும். எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் நான் படத்தில் வில்லன் பாத்திரம் தான். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker