Latestமலேசியா

5 ஆண்டு கால ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை; ஜனவரியில் தொடங்கப்படும்!

கோலாலம்பூர், டிச.10- ஊழலுக்கு எதிரான ஐந்தாண்டு தேசிய வரைவுத் திட்டத்தை அரசாங்கம் அடுத்த மாதம் அமல்படுத்தும் என்று டான்ஶ்ரீ அபு காசிம் முகமட் கூறினார்.

“ஊழல் சம்பவங்கள் நாட்டில் தொடரக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அந்த வரைவு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது” என்று ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு தேசிய மையத்தின் (ஜி.ஐ.ஏ.சி.சி) தலைவரான அபு காசிம் தெரிவித்தார்.

“ஊழலுக்கு எதிராக போராடுவதில், ஒரு முறையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியை நாம் அமல்படுத்த வேண்டும்” என்று கருத்தரங்கு ஒன்றில் கலந்துக் கொண்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.

இதனிடையில், ஊழல் நிறுவனங்களை எதிர்க்கும் அனைத்துலக சங்கம் (ஐ.ஏ.சி.சி.ஏ), நன்கொடை நிதி ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறது. அந்த சங்கத்திற்கு 500,000-யை பங்களிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“காதாரும் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்கவிருக்கிறது. ஊழலை எதிர்த்து போராடியதால், பல்வேறான வகையில் பாதிக்கப் பட்டோருக்கு உதவ அந்த நிதி திரட்டப் படுகிறது.

“ஊழலை எதிர்த்து போராடிய பலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்” என்று அவர் சுட்டிக் காட்டினார். திரட்டப் படும் அந்த நிதி, பாதிப்படைந்தவர்களுக்கு உதவியாக அமையும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker