Latestசினிமாமலேசியா

கலப்படம்- நாட்டின் முதல் ‘அந்தோலோஜி’ படம்; ஜனவரியில் வெளியீடு!- (video)

கோலாலம்பூர்,டிச.11- ஒரே படத்தில் வெவ்வேறு இயக்குநர்களின் ஐந்தாறு குறும்படங்கள் இடம்பெற்றிருப்பதுதான் “Anthology Films” எனப்படுகிறது. தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்கூட திரைப்படம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறான “Anthology” படங்களை தயாரித்தவர்தான்…

அந்த வகையில், வடை புரோடாக்‌ஷன் அடுத்தாண்டு ஜனவரியில் “கலப்படம்” என்ற மலேசியாவின் முதல் தமிழ் Anthology” படத்தை வெளியிடவுள்ளது.

அப்படத்திற்கு முகவரி அளிக்கும் வண்ணம் இன்று அதன் ஒரு காட்சியை வடை புரோடாக்‌ஷன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டு சிறிது நேரத்திலேயே அக்காட்சியை பலரும் பகிர்ந்து அப்படத்தின் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இளம் இயக்குநர்களான கவிநந்தனும் சங்கர் ராகவனும் ‘கலப்படம்’ படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். அந்தப் படத்தில் ‘அவள் ஒரு விடுகதை’, ‘ரெளத்திரம் பழகாதே’ என்று இரு குறும்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் எது யார் இயக்கிய படம் என்பதை கவிநந்தனும் சங்கர் ராகவனும் இன்னும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.

கலப்படத்தில்,இயக்குநர் கவிநந்தன், ரோஷினி ஜெகதீஸ்வரன், தேவகுரு சுப்பையா, சக்தி தேவேந்திரன், டாஷன் வேங்கேசன், நீத்தா கிரிஸ்ணன், ஹரிகிரிஸ்ணா கோபால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்கள் ஏந்தியுள்ளனர்.

KALAPADAM | Sneak Peek

A Glimpse of Malaysia's First Tamil Anthology Film, "KALAPADAM"Directed by Shanker Ragaven & K. Kavi Nanthan.Starring: K. Kavi Nanthan, Rosshini Jegatheswaran, Thevaguru Suppiah, Sakthi Dawadran, Dashen Vengesen, Nita Krishnan, Harikrishna Gopal.Please SHARE if you LIKE it <3#Kalapadam#VadaiProductions

Posted by Vadai Productions on Monday, 10 December 2018

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker