Latestமலேசியா

சொத்து விவரங்களை அறிவிக்க எனக்கு இன்னும் அவகாசம் உள்ளது- அன்வார்

செர்டாங்,டிச.11- இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதால், சொத்து விவரங்களை அறிவிக்க தமக்கு இன்னும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தமக்கு வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசத்தை தாம் மீறவில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் கூறினார்.

“பொறுமையாக இருங்கள்… ஊழல் தடுப்பு ஆணையம் எனக்கு 3 மாதங்கள் கொடுத்துள்ளது. நான் அண்மையில்தான் இடைட்தேர்தலில் வெற்றி பெற்றேன்” என்ற்ய் அவர் செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்ககழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

டிசம்பர் 9-ஆம் தேதி வெளியான பெர்னாமாவின் செய்தியின்படி, இன்னும் 13 பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என்றும், அவர்களில் அன்வாரும் அடங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில், பேரா மந்திரி புசார் அகமட் பாய்சால் அஸுமு, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் முகமாடின் கெத்தாப்பி, பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தாம் சொத்து விவரங்களை அறிவித்து விட்டதாகவும், ஆனால் தமது விவரங்களை அமலாக்கத் தரப்பினர் இன்னும் நிகழ்நிலைப்படுத்தப்படவில்லை என்றும் பாய்சால் குறிப்பிட்டார்.

மாறாக, தாம் ஓர் ஏழை என்று முகமாடின் கூறி இருக்கின்ற வேளை, வேதமூர்த்து தமக்கு சொத்துக்களே இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker