Latestமலேசியா

ஆனந்த கிருஷ்ணனின் ரிம.1 பில்லியன் மதிப்புமிக்க விடுதியை ஸ்பானிஷ் நிறுவனம் வாங்கவிருக்கிறது!

ஹாங் காங், டிச.12- மலேசிய கோடிஸ்வரரான தி.ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான  ரிம.1 பில்லியன் மதிப்பிலான விடுதியை வாங்க, பொழுதுபோக்கு/கேளிக்கை பூங்கா நடத்தும் நிறுவனமான பார்கேஸ் நியூனிடோஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜெர்மனியில், ட்ரோபிகல் ஐலாண்ட் என்றழைக்கப்படும் அந்த விடுதியை வாங்க  மாட்ரீட்டை சேர்ந்த அந்த நிறுவனம் ஆனந்த கிருஷ்ணனுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த விடுதியை, அந்த ஸ்பானிஷ் நிறுவனம், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வாங்கவிருப்பதாக ப்ளூம்பேர்க் நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பெர்லின் நகரத்தில் அமைந்துள்ள ட்ரோபிகல் ஐலாண்ட் விடுதி, 2004-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

உலகின் மிகப்பெரிய உட்புற மழைக்காடுகள், பனை மரத்தாலான செயற்கை கடற்கரைகள் மற்றும் கோல்ப் விளையாடும் இடங்கள் போன்ற செழிப்பான இடங்களை கொண்டு, பிரமாண்டமாக அவ்விடுதி காட்சியளிக்கிறது.

அவ்விடுதியின் பங்குகள் தஞ்சோங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் கட்டுப் படுத்தப் படுகின்றன.

கோடிஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன், உள்நாட்டில் முதலீடுகளை செய்ய முடிவெடுத்துள்ளதை தொடர்ந்து, அவரின் வெளிநாட்டு சொத்துகள் விற்பனைக்கு உட்படுத்தப் படுவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker