Latestமலேசியா

1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்த குற்றச்சாட்டை மறுத்தார் நஜிப்!

கோலாலம்பூர்,டிச.12- பொதுக் கணக்குக் குழுவிடம் (PAC) 1எம்டிபி கணக்கறிக்கையை அறிவிக்கும் முன்பாக அந்தக் கணக்கறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு தமது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்திய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் உத்தரவிட்டதாக அவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும், நீதிபதி அஸுரா அல்வியின் முன்னிலையில் தம் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை நஜிப் மறுத்து விசாரணைக் கோரினார்.

பிரதமர் என்ற பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் இந்தக் குற்றத்தை 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதியில் இருந்து 26-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் புத்ராஜெடா, பிரதமர் துறைக் கட்டடத்தில் புரிந்திருப்பதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2009-ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செக்‌ஷன் 23(1)-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட வேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கபடலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker