Latestமலேசியாவிளையாட்டு

AFF SUZUKI கிண்ணம்: மலேசியா-வியட்நாம் சமநிலை (2-2)

கோலாலம்பூர்,டிச.12- நேற்றிரவு நடைபெற்ற 2018 ஆண்டின் ஏஎப்எப் கிண்ண காற்பந்து போட்டியின் முதலாம் இறுதிச் சுற்று ஆட்டத்தில், மலேசியாவும், வியட்நாமும் தலா இரண்டு கோல்களைப் புகுத்தி சமநிலை கண்டன.

புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முற்பாதியில், மலேசியாவின் ஷாருல் சாஹாட் சொந்த கோலைப் புகுத்தி மலேசிய ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தொடர்ந்து, வியட்னாமின் பாம் டுக் ஹூய் மற்றொரு கோலைப் நுழைத்து வியட்னாமை 2-0 என்ற நிலையில் முன்னிலைப் படுத்தினார்.

ஆயினும், மலேசிய ரசிகர்கள் ஹரிமாவ் மலேசியாவுக்கு ஆதரவு குரலை எழுப்புவதை நிறுத்தவே இல்லை. அந்த ஊக்கத்தின் பேரில் கடும் போராட்டத்திற்கு இடையில் ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் மலேசியாவுக்கான முதல் கோலைப் புகுத்தினார்.

பிற்பாதி ஆட்டத்தில் மலேசியாவின் சபாவி ரஷிட் மற்றொரு கோலைப் புகுத்தி ஆட்டத்தை 2-2 என்று சமநிலைப்படுத்தினார்.

அதன் பிறகு இரண்டு அணிகளுமே கோல் அடிக்க முயற்சித்தும் ஆட்டம் 22- என்று சமநிலையில் முடிவுற்றது.

இறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டம் வியட்நாம், ஹானோயில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker