Latestமலேசியா

சட்டவிரோத தொழிலாளர்கள்; விதிமுறை தளர்வு இனி இருக்காது! -அமைச்சு

கோலாலம்பூர், டிசம்.13- கள்ளத்தனமாக  நாட்டில் வேலை பார்த்து வரும் அந்நிய நாட்டு தொழிலாளர்களை, சட்டப் பூர்வ தொழிலாளர்களாக மாற்றும் நடவடிக்கைகளை அரசு இனிமேல் அடிக்கடி மேற்கொள்ளப் படமாட்டாது என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டினுள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், நம் நாட்டின் சட்டத்தைக் குறைத்து எடைபோடாமல் இருக்கும் நோக்கத்திற்காக இந்நடிவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ முகமட் அஸிஸ் ஜம்மான் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, அந்தச் சட்டவிரோத குடியேறிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை தாண்டி, அவர்கள் நாட்டில் தங்குவதை தவிர்ப்பதற்காகவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.

“சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை, சட்டப்பூர்வ தொழிலாளர்களாக மாற்றுவதற்காக இதுவரை அடிக்கடி விதிமுறைகள் மாற்றப்பட்டு வந்தன. ஆனால், அவ்வாறான நடவடிக்கை அடிக்கடி மேற்கொள்ளப் படுவதால், அது மோசமான கலாசாரமாக கருதப் படலாம்” என்றார் அவர்.

அதன் அடிப்படையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு உறுதியான எச்சரிக்கை வழங்கும் வகையில், இனிமேல் விதிமுறைகளில் தளர்வு இருக்காது இந்த நடவடிக்கை அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நடப்பில் உள்ள சட்டத்தை அந்நிய தொழிலாளர்கள் அல்லது சட்டவிரோத குடியேறிகள் பின்பற்ற வேண்டும் என்பதை இந்தப் புதிய நடவடிக்கை உறுதி செய்யும் என்று அஸிஸ் ஜம்மான் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையில், நாட்டிலுள்ள சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோத தொழிலாளர்கள் மீதான சோதனை நடவடிக்கை என்று நிறைவு பெறும் என்ற கேள்விக்கு, அந்தப் பிரச்சனை முழுமையாக களையப் படும் வரையில், அவர்கள் மீதான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker