Latestமலேசியா

ஹோட்டல் வாங்கிய விவகாரம்: இசா சாமாட் நாளை குற்றம் சாட்டப்படலாம்!

கோலாலம்பூர்,டிச.13- கூச்சிங்கில் தங்கும் விடுதி ஒன்று வாங்கப்பட்டது தொடர்பில் முன்னாள் பெல்டா தலைவர் முகமட் இசா அப்துல் சாமாட் மீது நாளை நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இசா 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் செக்‌ஷன் 17-இன் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம் என கூறப்படுகிறது.

நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி புசாருமான இசா லண்டனில் ஒரு தங்கும் விடுதியும், சரவாக்கில் ஒரு தங்கும் விடுதியும் வாங்கிய விவகாரம் தொடர்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். அச்சமயத்தில், சிலாங்கூரில் உள்ள அவரது இல்லத்திலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker