Latestஉலகம்

3 வயது சிறுவன், 8 மாத சகோதரியை சுட்டான்! பெற்றோர் கைது!

மெக்சிக்கோ சிட்டி, டிசம்.13- மெக்சிக்கோவிலுள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் பெற்றோருடன் தங்கியிருந்த 3 வயது சிறுவன் துப்பாக்கியால் தமது 8 மாத சகோதரியை சுட்டான்.

விடுதி அறையில் கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன். திடீரென்று தமது சகோதரியான 8 மாத குழந்தையைச் சுட்டுள்ளான்.

இச்சம்பவம் நடந்த போது சிறுவனின் பெற்றோர் அடுத்த அறையில் இருந்துள்ளனர். இது தொடர்பாக சொந்த பிள்ளைகளை கவனிக்காத குற்ரச்சாட்டின் பேரில் பெற்றோரை கைது செய்த போலிசார், வழக்குப் பதிந்துள்ளனர்.

18 வயதான தாயார் சைனே நெல்சன் மற்றும் 21 வயதான தந்தை டைரெல் பிட்ஸ்சி ஆகியோர் மீதே போலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ஆனால், துப்பாக்கி தங்களிடம் இல்லை எனவும் அந்த அறையில் அது எவ்வாறு வந்தது என்பது தங்களுக்கே தெரியாது எனவும் போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த அறையில் தங்களுக்கு முன்னர் தங்கியவர்களின் துப்பாக்கியாக இருக்கலாம் என நெல்சன் தெரிவித்தார். இருப்பினும் சம்பவத்திற்கு பின்னர் பிட்ஸ்சி துப்பாக்கியை துடைப்பதைப் அப்பகுதியில் உள்ள சிலர் பார்த்ததாக போலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker