Latestஉலகம்

“என்னைக் கொல்ல டிரம்ப் சதி” -வெனிசூலா அதிபர் புகார்

கராக்காஸ், டிசம்.14- தன்னைக் கொலை செய்யவும் வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றஞ்சாட்டி உள்ளார்.

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் மாறாக, அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இதனைக் காரணமாகக் காட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா அதிபர் டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்நிலையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:

“என்னைப் படுகொலை செய்யவும் வெனிசூலாவில் அன்னியநாட்டு படைகளைக் குவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டி வருகிறது.

இதற்கான பொறுப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் உதவியோடு வெனிசூலா மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker