Latestமலேசியா

கிள்ளானில் நடந்த கொடூரம்: திருநங்கை அடித்துக் கொலை!

கிள்ளான், டிசம்.14- இங்கு புக்கிட் திங்கியில், 32 வயது திருநங்கை ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டார். சபாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, கடந்த புதன்கிழமையன்று, சில ஆடவர்கள் அடங்கிய கும்பல், கூர்மையற்ற ஆயுதம் கொண்டு தாக்கி, கொலை செய்துள்ளது.

மூளைப் பகுதியில் கடுமையான இரத்த கசிவுக்கு ஆளாகி, மண்டை ஓடு உடைந்த நிலையில், உடலில் பல்வேறு பகுதிகளில் 32 கடுமையான காயங்களுக்கு அந்தப் பெண் ஆளாகி அந்தப் பெண் இறந்திருக்கிறார் என்று மருத்துவ பிரேத பரிசோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது.

தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப் பட்டதால், அந்தப் பெண் இறந்திருக்கிறார் என்று அந்த மருத்துவ அறிக்கை கூறியுள்ளது. வியாழக்கிழமை காலை 7 மணியளவில், புக்கிட் திங்கி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் முன்புறம் சுயநினைவின்றி அந்தப் பெண் கிடந்ததாக தென் கிள்ளான் போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷம்சூல் அமர் ரம்லி சொன்னார்.

“அதனைத் தொடர்ந்து, அவர் அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலை 10.47 மணிக்கு மரணமடைந்தார்” என்று அவர் விளக்கினார். குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ், அந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker