Latestமலேசியா

குடிநுழைவு துறை சோதனை: 204 கள்ளக் குடியேறிகள் கைது!

கோலாலம்பூர், டிசம்.14- சைபர்ஜெயா பகுதியில் குடிநுழைவு துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், 204 கள்ளக் குடியேறிகள் தடுத்து வைக்கப் பட்டனர்.

சைபர்ஜெயா பகுதிகளில், புதன்கிழமை இரவு மற்றும் நேற்று நடத்தப்பட்ட முதல் சோதனையில், இந்தோனிசிய, சீன மற்றும் வங்காளதேசத்து நாடுகளைச் சேர்ந்த 235 கள்ளக் குடியேறிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவு துறையின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி கூறினார்.

“அவர்களில், முறையான பயண ஆவணங்கள் கொண்டிராத, கொடுக்கப் பட்ட அவகாசத்திற்கு மேல் நாட்டில் தங்கியுள்ள, மற்றும் காலாவதியான வேலை பெர்மிட்டுகளை கொண்டிருந்த 185 பேர் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்” என்று அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, கள்ளக் குடியேறிகள் பலர், ஒன்றாக இணைந்து, செம்பனைத் தோட்டங்களில் தங்குவதற்கான ‘கோங்சி’ என்றழைக்கப் படும் வீடுகளை அமைத்துள்ளனர் என்பதும் அச்சோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையில், ஜாலான் லோக் இயூவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், இந்தோனிசிய மற்றும் தாய்லாந்து பெண்களைப் பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை குடிநுழைவு துறை கண்டறிந்ததாக முஸ்தாபார் தெரிவித்தார்.

“அச்சோதனையில், 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட 18 இந்தோனிசிய மற்றும் தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியின் பாதுகாவலரான வங்காளதேசத்து ஆடவரும் கைது செய்யப்பட்டார்” என்று அவர் கூறினார்.

தங்களின் விபச்சார நடவடிக்கைக்கான வாடிக்கையாளர்களை, சமூக வலைத்தளங்கள் வாயிலாக அப்பெண்கள் ஈர்த்து வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கள்ளக் குடியேறிகள் அனைவரும், புக்கிட் ஜாலிலில் உள்ள தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker