Latestசினிமா

கோடீஸ்வரக் காதலனுடன் வலம் வரும் எமி ஜாக்சன்

மும்பை, டிச.14- மும்பையில் அனைத்துலக பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றில் தனது கோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் கலந்து கொண்டார் எமி ஜாக்சன்.

தற்போது படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது- காதலருடன் அவ்வபோது உல்லாசம் செல்வது போன்ற புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்சன்.

நடிகர் பிரதீப் பாப்பருடன் நட்பில் இருந்த இவர், தற்போது வேறு ஒரு கோடீஸ்வர காதலனுடன் வலம் வருகிறார். மும்பையில் அனைத்துலக பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தனது புதிய காதலருடன் கலந்து கொண்டார்.

இங்கிலாந்தின் கோடீஸ்வர தொழில் அதிபரின் மகன் ஜார்ஜ் பனயியோடோ என்பவர் தான் எமியின் தற்போதைய காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker