Latestசினிமா

ஜட்டியுடன், பட்டினி போட்டு அடித்தனர்! -பவர் ஸ்டார் கண்ணீர்

சென்னை, டிசம். 14- ‘பவர் ஸ்டார்’  ஶ்ரீனிவாசன் கடத்தப்பட்டார் என்ற செய்தி கடந்த இரு நாட்களாகவே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடத்திய கும்பலிடமிருந்து தப்பித்து வந்த பவர் ஸ்டார் சென்னை போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பவர் ஸ்டார் மிகவும் பிரபலமடைந்தார்.

நடிகர் பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசனை பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள் சென்னையிலிருந்து ஊட்டிக்கு கடந்த 5 ஆம் தேதி கடத்தினார்கள். மேலும் அவரது மனைவி ஜூலியையும் சிறை வைத்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிய பவர் ஸ்டார் கோயம்பேடு போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவரது மனைவியும் மீட்கப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவர் ஸ்டார் கூறியதாவது:-

ஆறு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவைச் சேர்ந்த ஆலமிடம் ரூ. 1.25 கோடி வாங்கினேன். அந்த பணத்தில் 35 லட்சம் ரூபாய் திரும்பக் கொடுத்து விட்டேன். இந்நிலையில் எனக்கு படவாய்ப்பு வருவதாக போன் செய்து என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்தனர்.

அவர்கள் கூறியதை நம்பி, ஹோட்டல் அறைக்கு சென்றேன். அப்போது ஆலம் என்பவரிடம் வாங்கிய பணத்தை உடனடியாகச் செலுத்துமாறு மிரட்டினர்.

பின்னர் என்னுடைய ஆடைகளையும் செல்போனையுப் பறித்து என்னை உள்ளாடையுடன் உட்கார வைத்தனர். அன்று முழுவதும் பட்டினியோடு வைத்திருந்ததோடு சரமாரியாக அடிக்கவும் செய்தனர் எனக் கூறி கண்கலங்கினார் பவர் ஸ்டார். இந்த ஆள் கடத்தல் தொடர்பில் இதுவரை ஐந்து நபர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker