Latestமலேசியா

“நீங்கள் லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளலாமே..” -வலைவாசியின் கோரிக்கை: ஹன்னா ‘சுறுக்’ பதில்

கோலாலம்பூர், டிசம். 14- ”நீங்கள் வேலைக்குச் செல்லும் போது தயவு செய்து லிப்ஸ்டிக் பூசிக் கொள்ள முடியுமா?” என்று சமூக ஊடகத்தில் நெட்டிஸன் ( வலைவாசி) ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு, மகளிர், குடும்ப மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை துணையமைச்சரான ஹன்னா இயோ, மிகவும் சூட்சமமான பதிலை அளித்திருக்கிறார்.

அவரது பதில் சூட்சமமானதாக இருந்தாலும் அது சுறுக்கென்று தைக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதன் மூலம் அமைச்சரின் ஓர் அம்சமாக பார்வைக்கு தோற்றம் தாருங்கள்” என்று அந்த வலைவாசிகவருக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

ஹன்னா இயோ தனது முகநூலில் பதிவேற்றியிருந்த புதிய புரோஃபைல் படம் தொடர்பில் கே.கே. வோங் என்ற பெயரைக் கொண்ட அந்த வலைவாசி, கருத்துக் கூறிய போது மேற்கண்டவாறு விமர்சித்திருந்தார்.

”உண்மையில் நீங்கள் மிக அழகானவர். நீங்கள் வேலைக்குச் செல்லும் போது லிப்ஸ்டிக் பயன்படுத்தலாமே.., இப்போது நீங்கள் எங்களின் அமைச்சர். எனவே நீங்கள் அமைச்சரின் அம்சத்துடன் தோற்றம் தாருங்கள்” என்று கே.கே. வோங் சுட்டிக்காட்டி இருந்தார்.

தான் லிப்ஸ்டிக் பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்த வோங்கிற்கு முதலில் நன்றிக் கொண்டு தமது பதிலை ஹன்னா இயோ பதிவு செய்துள்ளார்.

“எனக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தவேண்டும் என்று தோன்றும் போது நான் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது உண்டு. அப்படிச் செய்ய வேண்டும் என்ற வற்புறுத்தல் இருக்குமானால் நான் அப்படிச் செய்யப் போவதில்லை” என்றார் ஹன்னா இயோ.

“என்னுடைய வேலையின் தரத்தை எந்த வகையிலும் ஒப்பனை பாதிக்கப் போவதில்லை வேலையிடத்தில் எந்த பெண்ணையும் இந்த ஒப்பனை பாதிப்பதாக இருக்கக்கூடாது. உங்களின் முகத்தில் எத்தகைய கிரீம் பூசிக்கொள்ள வேண்டும் என்று எந்தவோர் ஆண் அரசியல்வாதிக்கு சொல்லப்பட்டது கிடையாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹன்னா இயோ, கடந்த 2013 ஆம் ஆண்டில் சிலாங்கூர் சட்டமன்றத்தின் முதலாவது பெண் சபாநாயகராக நியமனம் பெற்ற பெருமைக்கு உரியவர் என்பதோடு மலேசியாவில் 34 வயதில் பொறுப்பேற்ற இளம் சபாநாயகர் என்ற பெருமைக்கும் உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker