Latestஇந்தியா

பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர்! இராணுவ அதிரடியில் மாண்டார்!

ஶ்ரீநகர், டிசம். 14- காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் இளம் இந்தி நடிகர் ஒருவர் கொல்லப்பட்டார்.

பந்திபோர் என்ற இடத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டனர்.

பயங்கரவாதிகளுடன் 18 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஹாஜில் மற்றும் பிலால் என்ற இருவரும் அடங்குவர்.

பிலால் இந்தியில் ஷாகித் கபூர், தபு ஸ்ரத்தா கபூர் ஆகியோர் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான ‘ஹைதர்’ படத்தில் இவர் நடித்துள்ளார். உள்ளூர் நாடகங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் பிலால் ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இருக்கும் படம் சமூக வலைத்தளத்தில் வெளியானதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தான் அவர் லஸ்கர்-இ-தொய்யா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker