Latestஉலகம்

ராஜபக்சேயை கவிழ்த்த மந்திரத் தாயத்துகள்! சிரிசேனாவுக்கு உச்சநீதிமன்றம் நெத்தியடி!

கொழும்பு, டிச.14- நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் மைத்திரி சிரிசேனா விடுத்த உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்று 7 உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு ஒருமித்து தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அதுவும் தமிழ் மக்களுக்கு எதிராக தாம் விரும்பியவாறு தீர்ப்பை பெற்ற நீதிமன்றத்தில், இன்று தமக்கு வேண்டிய தீர்ப்பை பெற முடியாமல் ராஜபக்சே தலைகுனிந்த விதம் பெரும் ஆச்சரியம் தான் என்று ஊடகங்கள் வர்ணித்தன.

மகிந்த ராஜபக்சேவை பொறுத்தவரையில் அவர் நம்பிய சோதிடம் கை கொடுக்கவில்லை அவர் கைகளில் கட்டிய மந்திரத் தாயத்துக் கயிறுகள் கைக்கொடுக்கவில்லை. அவர் விகாரை விகாரையாக கும்பிட்டும் பயன் கிடைக்கவில்லை.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட 7 நீதிபதிகளில் ஒரு நீதிபதி கூட நடப்பு அதிபர் சிரினாவுக்கும் முன்னாள் அதிபர் ராஜபக்சேயிக்கும் சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை.

அதிபர் தேர்தலில் அவரை மக்கள் தோற்கடித்தார்கள். மக்களின் அந்த தீர்ப்பை அவர் மதித்திருந்தால் இன்று இந்த அவலத்தை சந்தித்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது என்று ஊடகங்கள் சாடின.

அண்மையில் பிரதமர் ரணிலை நீக்கி விட்டு ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார் அதிபர் சிரிசேனா. அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இருமுறை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வி கண்டதால் நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டு சிரிசேனா பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.

எனினும் அவரது உத்தரவு செல்லாது எனக் கூறி, இதனை எதிர்த்து தமிழர் தேசியக் கூட்டணி மற்றும் இரு அரசியல் கட்சிகள் உள்பட 13 அமைப்புக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

அதிபர் சிரிசேனாவின் நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்து உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பாக வர்ணிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker