Latestமலேசியா

ரிம.1 கோடி முறைகேடு; ஸாஹிட் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்,டிச.14- மூன்றாண்டுகளுக்கு முன் ‘ஆக்கால்பூடி’ அறக்கட்டளைக்குச் சொந்தமான ஒரு கோடி ரிங்கிட் பணத்தை கையாடல் செய்ததாக மேலுமொரு குற்றச்சாட்டை அம்னோ தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிட் எதிநோக்கினார்.

எனினும், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸினா அயோப்பிற்கு முன்னிலையில் தம் மீதான அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை மறுத்து விசாரணை கோரினார்.

இந்தக் குற்றச்சாட்டுடன் சேர்ந்து ஸாஹிட் மீது தற்போது 46 குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஸாஹிட் மீது பாய்ந்துள்ள புதிய குற்றச்சாட்டில், அவர் தமது பொறுப்பில் இருந்த ஆக்கால்பூடி அறக்கட்டளையின் நிதியிலிருந்து ஒரு கோடி ரிங்கிட்டை அர்மாடா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு கடனாக அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அவர் அக்குற்றத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, கோலாலம்பூர், ஜாலான் பூனூஸ் அப்பின் வங்கியில் புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஈராண்டில் இருந்து 20 ஆண்டுகள் வரைக்குமான சிறைத் தண்டனையும் பிரம்படியும், அவற்றுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker