Latestவிளையாட்டு

AFF சுஸூக்கி கிண்ணம்: மலேசிய ரசிகர்கள் வியட்னாம் விரைந்தனர்!

சிப்பாங், டிச.14- நாளை வியட்நாமில் நடைபெறவிருக்கும் ஏ.எப்.எப் சுஸூக்கி கிண்ண கால்பந்து போட்டியின் 2ஆம் கட்ட இறுதி ஆட்டத்தில் மலேசியக் குழுவை ஆதரிக்கும் நோக்கில், நூற்றுக் கணக்கான மலேசிய கால்பந்து ரசிகர்கள், இன்று ஏர் ஆசியா ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விமானத்தில் ஹானோயை நோக்கி புறப்பட்டனர்.

அந்தப் போட்டிக்காக ஹனோய் நகரத்திற்கு மலேசிய ரசிகர்கள் சென்று வர உதவும் வகையில், ஏர் ஆசிய நிறுவனம் இரு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இன்று அந்நகரை நோக்கி பயணத்தை மேற்கொண்ட ரசிகர்களுக்கு, அந்நிறுவனம் சிறப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தது.

ஏர் ஆசியா நிறுவனத்தின் வர்த்தகக் குழுவின் துணைத் தலைமை செயல்நிலை அதிகாரி போ லிங்கம் மற்றும் பெட்ரோனாஸ் டகாஙான் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ ஷேட் ஸைனால் அபிடின் ஆகியோர் அந்த ரசிகர்களை விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

“ஹானோய் நகரத்திற்கு சென்று, மலேசிய கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் மற்றும் அதனை ஏற்பாடு செய்துள்ள ஏர் ஆசியா நிறுவனத்தின் முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்று செயல்நிலை அதிகாரி போ லிங்கம் தெரிவித்தார்.

“இந்தப் பயணச் சேவை குறித்த தகவல் அறிந்த பெட்ரோனாஸ் நிறுவனம், அந்த இரு விமானச் சேவைக்கான பெட்ரோல் தொகையை ஏற்றுக் கொண்டது. அதன் வாயிலாக, இப்பயணச் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரிம.50-யை எங்களால் திருப்பி தர முடிந்தது” என்று போ லிங்கம் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker