Latestஉலகம்

இலங்கையை ஆட்டிப் படைப்பது யார், சுமந்திரனும் சம்பந்தனுமா?

கொழும்பு, டிச.15- விடுதலைப் புலிகளை தோற்கடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவே அனைவரும் செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பதிலாக சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்படுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியையும் அவரே இயக்குகின்றார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிழல் பிரதமராக செயல்படுகின்றார்.  இவர்கள்  இருவரும் தான் இப்போது கொழும்பு அரசியலையும் நாட்டையும் ஆட்டிப் படைக்கின்றனர். இவ்வாறான நபர்களிடம் நாட்டை கையளிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

எவ்வாறாயினும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது. ஆகையினால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊடாக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker