Latestமலேசியா

கிள்ளானில் திருநங்கை கொடூரக் கொலை: மேலும் 2 நபர்கள் கைது!

கிள்ளான், டிசம்.15 – கிள்ளானில் 37 வயதுடைய திருநங்கை ஒருவர், ஒரு அராஜகம் கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்னர்.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இரவு கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர்களின் கும்பல் ஒன்று அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்றது. பல்வேறு கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட அந்தத் திருநங்கையின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு, மூளையில் இரத்தம் உறைந்து இறந்துள்ளார். அவரது உடலுக்குள் 39 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது.

இந்தப் படுகொலை தொடர்பில் ஏற்கெனவே இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரு சந்தேகப்பேர்வழிகள் கைதாகி இருப்பதாக தென் கிள்ளான் போலீஸ் துறை துணை ஆணையர் ஷம்சுல் அமார் தெரிவித்தார்.

சுமார் 16 மற்றும் 17 வயதுடைய இரு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டு டிசம்பர் 19 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்தப் படுகொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேகப் பேர்வழி தேடப்பட்டு வருகிறான் என்று ஷம்சுல் அமார் சொன்னார். இந்தக் கொலை, கைத்தொலைபேசி திருட்டு தொடர்பாக எழுந்த பிரச்சனையில் நடந்திருப்பதாக போலீசார் கூறிக் கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker