Latestமலேசியா

கேமரன்மலை தொகுதியில் மீண்டும் தேர்தல் ! விரைவில் தேதி!

கோலாலம்பூர், டிசம்.15 – கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

கடந்த 14-ஆவது பொதுத்தேர்தலின் போது கேமரன் மலை நடந்த தேர்தல் செல்லதக்கது அல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நீதிமன்றத்தின் அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படாததால், கேமரன் மலையில் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்யப் பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் அஷார் அஸீஜான் ஹருண் தெரிவித்தார்.

மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 ஆம் தேதி வரை தான். அந்தக் காலக்கட்டம் முடிந்து விட்டதால் தேர்தல் நடத்துவது முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் அந்தத் தொகுதி இன்று முதல் காலியாகி விட்டது. இதனால், தேர்தல் விதிமுறைப்படி அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.

திங்களன்று, கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி காலியாகி விட்டது குறித்து மக்களவை சபா நாயகருக்கு முறையாக தெரிவிக்கப்படும். பின்னர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தேதி மற்றும் வாக்கெடுப்பு தேதி ஆகியவை நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker