Latestவிளையாட்டு

‘வெற்றியுடன் தாயகம் திரும்புக!’ ஹரிமாவ் மலாயாவுக்கு மகாதீர் வாழ்த்து

கோலாலம்பூர், டிசம்,15 – ‘முழு முச்சாக போராட்டம் நடத்துங்கள். வெற்றிக் கிண்ணத்தோடு தாயகம் திரும்புங்கள்என்று ஹரிமாவ் மலாயா கால்பந்துக் குழுவுக்கு தம்முடைய வாழ்த்துக்களை பிரதமர் துன் மகாதீர் தெரிவித்து உள்ளார்.

.எப்.எப் சுஸுக்கி கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் வியட்னாமின் ஹானோய் நகரில் இன்றிரவு நடைபெறவிருக்கிறது. மலேசியாவுக்கும் வியட்னாமிற்கும் இடையிலான இந்த ஆட்டத்தின் முதல் கட்ட மோதல் கோலாலம்பூரில் நடந்த போது இரு குழுக்களும் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டன.

இந்த நிலையில், 2 ஆவது கட்ட இறுதியாட்டத்தில் வியட்னாமுடன் ஹரிமாவ் மலாயா குழு பலப்பரிட்சையில் இறங்குகிறது.

நம்மால் எதிரிகளை வெல்ல முடியும் என்பதை நிருபியுங்கள். ஹரிமாவ் மலாயா குழுவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்என்றார் துன் மகாதீர்.

வியட்னாம் சென்றுள்ள நமது கால்பந்து ரசிகர்கள் முழுமையாக மலேசியாவுக்கு ஆதரவாக இருந்து குரல் கொடுத்து, உற்சாகம் அளித்து நமது குழுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். .எப்.எப் சுஸுக்கி சாம்பியனாக நமது வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்..  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker