Latestமலேசியா

ஊழலால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் ரிம.47 பில்லியன் இழப்பு!- வான் அஸிசா

கோலாலம்பூர், டிச.17- கடந்தாண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தொகையில் ரிம.47 பில்லியனை ஊழல்கள் காரணமாக மலேசியா இழந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும், உள்நாட்டு உற்பத்தி தொகையில், அதே தொகை, ஊழலால் இழக்கப்பட்டுள்ளதாக மலேசிய அனைத்துலக வெளிப்படைத் தன்மை நிறுவனத்தின் தகவல் குறிப்பிட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“கடந்த 2017-ஆம் ஆண்டில், சுகாதாரத் துறைக்கும், கல்வித் துறைக்கும் அரசாங்கம் செலவிட்ட தொகையை விட, ஊழலால் பணம் இழக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை நம்மிடம் இருந்திருந்தால், நாம் அதனைக் கொண்டு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நோயாளிகளின் நெரிசலைக் குறைத்திருக்கலாம்.

“குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பழுது பார்த்திருக்கலாம். சிறந்த மாணவர்களுக்குத் தேவையான உபகாரச் சம்பளத்தை வழங்கி இருக்கலாம்” என்று வான் அஸிஸா சொன்னார்.

“இதனிடையில், கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை, தனியார் துறையில், ஊழல் சம்பவங்கள் 19 விழுக்காடிலிருந்து 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாது, நாட்டில் சாதாரண விஷயங்களுக்கு கூட லஞ்சம் வழங்கும் மற்றும் வாங்கும் பழக்கம் மலேசியர்களிடத்தில் அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையில், நாட்டின் ஆட்சி கைமாறி உள்ள போதிலும், ஒரே நாளில் ஊழல்களை ஒரேடியாக அரசாங்கத்தால் முடக்கி விட முடியாது என்றும், அதனை காலப் போக்கில் தான் முடக்கிவிட முடியும் என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker