Latestமலேசியா

எட்வர்ட் வெட்டிக் கொலை: ஒரு பெண் உட்பட மேலும் ஐவர் கைது!

பெட்டாலிங் ஜெயா,டிச.17- “ரகசியா” கேளிக்கை விடுதிக்கு முன்வ் 28 வயது எட்வர்ட் ரிஷால் என்ற இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரு பெண்மணியும் அடங்குவார்.

அவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஸானி தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையை அடுத்து, எட்வர்ட் கொலை வழக்கில் மொத்தமாக எண்மர் கைதாகி உள்ளனர் என்றார் அவர்.

நேற்று காலை 5.32 மணி அளவில் ரகசியா கேளிக்கை மையத்தில் கைகலப்பு நடந்துள்ளது. அது, சம்பந்தப்பட்ட கேளிக்கை மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ரகசிய கண்காணிப்பு காமிராவில் பதவிவாகி இருந்தது.

அந்த கைகலப்பை அடுத்து, காலை 6.38 மணி அளவில் அந்த கேளிக்கை மையத்தை 4 கார்களில் வந்தடைந்த இந்திய கும்பல் ஒன்று எட்வர்ட்டை பாராங் கத்தியால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.

எட்வர்ட், பங்சாரிலுள்ள கேளிக்கை மையம் ஒன்றின் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்று மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 கார்களும் 3 பாராங் கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker