Latestமலேசியா

மோட்டார்சைக்கிள் பந்தய வீரர் ஹபிஸ் விபத்தில் மரணம்!

கோத்தா திங்கி,டிச.17- “கப் பிரிக்ஸ்” மோட்டார்சைக்கிள் பந்தய வீரர் ஹபிஸ் நோர் அஸ்மான், நேற்று டத்தாரான் பண்டார் பெனாவாரில் நடந்த இறுதிச் சுற்றின்போது பந்தயத் தளத்திலேயே விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அவருக்கு 22 வயதுதான் ஆகிறது.

நேற்று மாலை 4 மணி அளவில், பந்தயத்தின்போது ஹபிஸ் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர் ஒருவர் பந்தயத் தளத்தின் தடுப்பை மோதியதன் காரணமாக அந்தத் தடுப்பு பந்தயத் தளத்தின் நடுவே வந்து விழுந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த ஹபிஸ் அதனை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சுயநினைவின்றி விழுந்து கிடந்த ஹபிஸ் உடனடியாக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தினர்.

ஹபிஸின் தந்தை நோர் அஸ்மான் மாட் டாருசும் முன்னாள் மோட்டார்சைக்கிள் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker