Latestமலேசியா

வீட்டுப் பணிபெண்களும் தொழிலாளர்களே! வேலை வரைமுறை தேவை! – ஐரீன் சேவியர்

கோலாலம்பூர், டிசம்.17- வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் முன்வரவேண்டும். இதர தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அதே உரிமைகளை வீட்டுப் பணியாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பெர்த்துவான் சஹாபாட் வனிதா என்ற அரசு சாரா அமைப்பு கோரிக்கை விடுத்தது.

வீட்டுப் பணியாளர்களுக்கு கண்ணியமான வேலைச் சூழலை ஏற்படுத்தித் தருவது மீதான அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் 189ஆவது சாசனத்தை, மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று பெண் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் அமைப்பான பெர்த்துவான் சஹாபாட் வனிதா கேட்டுக்கொண்டது.

இந்த அனைத்துலக சாசனம், வீட்டுப் பணியாளர்களை ஒரு தொழிலாளியாக பார்க்க வேண்டுமே தவிர பணிப்பெண்கள் என்ற கோணத்தில் பார்க்கக்கூடாது என வலியுறுத்துகிறது என அந்த அரசு சாரா அமைப்பின் நிறுவனரான ஐரீன் சேவியர் வலியுறுத்தினார்.

இவர்களுக்கும் இபிஎஃப், சொக்சோ, விடுமுறை, நோய்க்கான விடுமுறை, ஆண்டு விடுமுறை ஆகிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

தினசரி வேலை நேரம் அவர்களுக்கு வரையறுக்கப்பட வேண்டும். அவர்கள் வீட்டில் தங்கி பணிபுரியும் நிலை இருப்பதால் அவர்களுக்கு தங்கும் வசதி தரமானதாகத் தரப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker