Latestமலேசியா

இன-சமய உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பீர்! – ஐஜிபி எச்சரிக்கை

கோலாலம்பூர்,டிச.18- இன மற்றும் சமயம் உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேசியப் போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் தாக்கப்பட்டதை அடுத்து நேற்று உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மறைவை அடுத்து அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

“பிரச்சனைகளுக்கான தீர்வை அமலாக்கத் தரப்பினரிடம் விட்டு விட வேண்டும். அதை விடுத்து சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதால்தான் அடிப்பின் மரணம் போன்ற சம்பவம் நிகழ்கின்றது. அதனால், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அமலாக்கத் தரப்புகளிடம் விட்டு விடுங்கள்” என்று அவர் கூறினார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரச மலேசிய போலீஸ் மேற்கொள்ளும் என்றார் அவர்.

இதனிடையே, மறைந்த அடிப்பின் குடும்பத்தாருக்கு போலீஸ் சார்பில் அவர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker