Latestமலேசியா

கிளந்தானில் 6,000 ஆண்டுக்கு முந்தைய இளம்பெண் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர், டிசம்.18- சுமார் 6,000 ஆண்டுகள் முதல் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் இளம் பெண் ஒருவரின் எலும்புக் கூடு கிளந்தான் மாநிலத்தின் நெங்கிரி பள்ளத்தாக்கிலுள்ள குவா சாவான் எனப்படும் அகழ்வாராய்ச்சி தளத்தில் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

அந்தக் குகை பகுதியில் மேற்கொள்ளப் படும் அகழ்வாராய்ச்சி வாயிலாக மெசோலிதிக் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் அந்தச் பெண்ணின் எலும்புக் கூட்டை, மலேசிய தேசிய பல்கலைக்கழகம், தேசிய பாரம்பரிய துறையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுல்தான் இட்ரீஸ் பல்கலைக்கழகத்தின் சரித்திர துறையின் ஆராய்ச்சியாளர்கள், ஆகியோர் கடந்த நவம்பர் 2-ஆம் தேதியன்று மண்ணிலிருந்து தோண்டியெடுத்தனர்.

மலேசியாவில் முந்தைய வரலாற்று நடைமுறைகளை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள அக்கண்டுபிடிப்பு நாட்டிற்கு மிகவும் முக்கியமான உண்மைகளாக கருதப் படுவதாக சுற்றுலா, கலை மற்றும் பாரம்பரிய அமைச்சர் டத்தோ முகமாடின் கெத்தாபி சொன்னார்.

“கண்டெடுக்கப் பட்ட எலும்புக் கூட்டின் இடுப்பு எலுப்பைச் சோதனை செய்ததன் வாயிலாக, அது பருவம் அடைந்த இளம் பெண்ணுக்கு சொந்தமானது என்பது உறுதிச் செய்யப் பட்டுள்ளது.

“அந்த எலும்புக் கூட்டின் கைகளில் நத்தை ஓடுகள் இருந்தன. கால் பாதத்தில் இயந்திரக் கல் கண்டெடுக்கப் பட்டுள்ளது” என்று அவர் சொன்னார்.

தோண்டி எடுக்கப்பட்ட அந்த எலும்புக் கூடு, கடந்த நவம்பர் 10-ஆம் தேதியன்று, குவா சாவான் பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டு, ஜே.டபள்யூ.என் பாதுகாப்பு ஆய்வகத்தில், 60 நாட்கள் சோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புக் கூட்டின் கைகளில் இருந்த நத்தை ஓடுகள், அமெரிக்காவிலுள்ள ‘பேட்டா’ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப் படும் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker