Latestமலேசியா

சட்டவிரோத வைப்புத் தொகை: டத்தோ பாண்டியன் – டத்தோ அமீர் குற்றச்சாட்டை மறுத்தனர்!

தைப்பிங், டிசம். 18- சட்டவிரோதமான முறையில் வைப்புத் தொகை (டெபாசிட்) பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட இரு வர்த்தகர்கள், அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினர்.

ஒரு முதலீட்டாளரிடமிருந்து 51, 673 ரிங்கிட்டை வைப்புத்தொகையாக இவர்கள் ஏற்றதாக நீதிபதி சுஹைமா முகம்மட் நூர் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டதை மறுத்தனர்.

வைப்புத்தொகை பெறுவதற்கான முறையான லைசென்ஸ் எதுவும் இல்லாத நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மற்றும் ஆகஸ்டு 18ஆம் தேதிக்கு இடையே இங்குள்ள பப்ளிக் பேங்கில் ஆர்.சுப்பிரமணியம் என்பவரிடமிருந்து 47,273 ரிங்கிட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டை டத்தோ எம்.பாண்டியன் (வயது 57) மற்றும் டத்தோ அமீர் நோராய்டின் (வயது 47) ஆகிய இருவரும் மறுத்தனர்.

மேலும், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஜோசப் சண்முகம் என்பவரிடமிருந்து 4,400 ரிங்கிட்டை வைப்புத்தொகையாகப் பெற்றதாக தமீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டையும் டத்தோ பாண்டியன் மறுத்தார்.

நிதிச் சேவைச் சட்டத்தின் 137(2) ஆவது பிரிவின் கீழ் இவர்கள் இருவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ள வேளையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இவர்களில் பாண்டியனுக்கு இருநபர்களின் உத்தரவாதத்தின் பேரில் 9,000 ரிங்கிட் ஜாமின் அனுமதி வழங்கப்பட்டது. அதேவேளையில் டத்தோ அமீருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தில் 6,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker