Latestமலேசியா

சீபீல்ட் ஆலயக் கலவரம்: விசாரணைக்காக மேலும் 38 பேர் தேடப்படுகின்றனர்!

கோலாலம்பூர்,டிச.18- கடந்த மாதம் சுபாங் ஜெயா, சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரங்கள் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் 38 பேரை போலீசார் அடையாளம் கண்டறிந்து வருகிறார்கள்.

தேடப்பட்டு வரும் சம்பந்தப்பட்ட நபர்கள் அவர்களாகவே விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஶ்ரீ வான் அகமட் நஜுமுடின் முகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில், சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் டிஎஸ்பி ஜி.கே. ஷான் கோபாலை 019-2714387 என்ற எண்ணிலும், சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் சட்ட விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஏஎஸ்பி எஸ்.நீரஜ் துரையை 016-3565622 எண்ணிலும் அல்லது சிலாங்கூர் தலைமையகத்தின் மரபணி தகவல் விசாரணைப் பிரிவின் இன்ஸ்பெக்டர் நோர்சியாவை 012-7989973 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

சீபீல்ட் ஆலயக் கலவரத்தின்போது தாக்கப்பட்டதால் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் படுகாயம் அடைந்தார். மூன்று வார போராட்டத்திற்கு பிறகு அவர் நேற்றிரவு 9.41 மணிக்கு காலமானார். அடிப் உயிரிழந்ததை அடுத்து அவரது மரணத்தை போலீஸ் கொலை என்று வகைப்படுத்தியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker