Latestமலேசியா

நூருல், கைரி, ரபிஸி சந்திப்பு: புரிகிறதா புதிர்?

கோலாலம்பூர், டிசம்.18- அம்னோவின் முன்னாள் இளைஞர் தலைவரான கைரி ஜமாலுடின், மற்றும் பிகேஆர் இளம் அரசியல் தலைவர்களான நூருல் இஸ்ஸா, ரபிஸி ரம்லி ஆகியோர் பங்சாரிலுள்ள உணவகம் ஒன்றில் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த படம் ‘பிரித்தா ஹரியான்’ தினசரியில் வெளியாகி இருப்பது ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிகேஆர் உதவித்தலைவர் பதவியிலிருந்து நேற்று விலகி விட்ட நிலையில் இன்று எதிரெதிர் முனையைச் சேர்ந்த இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதன் பின்னணி என்ன புதிர் பலருக்கு விளங்கவில்லை.

இந்த உணவகத்திற்கு நண்பகலில் முதலில் வந்தவர் நூருல் இஸ்ஸா. பின்னர் ரபிஸியும் அவரை அடுத்து கைரி ஜமாலுடினும் அங்கு வந்து சேர்ந்ததாகவும் இவர்கள் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து அருந்தியதாகவும் தெரிகிறது.

மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் படத்தை முதலில் பதிவிட்டவர் கைரி ஜமாலுடின். இதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் இந்தப் படம் பரவலானது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker