Latestமலேசியா

மக்கள் கண்ணீருடன் வீரமகன் அடிப்புக்கு பிரியா விடை…!

அலோர் ஸ்டார்,டிச.18- சீபீல்ட் ஆலயக் கலவரத்தில் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டதில் இருந்து இதோ இந்த நொடி வரையில் நாம் எல்லோரும் உச்சரிக்கும் ஒரே பெயர் ‘அடிப்’ தான்…

அந்த வீரமகன் தற்போது தமது சொந்த ஊரான கோலக்கெடா, கம்போங் தெபெங்காவிலுள்ள அஸ்-ஸாடா முஸ்லிம் பள்ளிவாசலின் மையத்துக் கொல்லையில் மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார்.

காலை 10.29 மணியளவில், அடிப்பின் நல்லுடல் தெபெங்காவ் தேசியப்பள்ளித் திடலில் ஹெலிகொப்டரில் வந்திறங்கியது. அங்கிருந்து அவரது இல்லத்திற்கு நல்லுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

உற்றார் உறவினர், ஊர் மக்கள், சக ஊழியர்கள், தலைவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் அடிப்பின் நல்லுடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்தினர்.

எந்தப் பாவமும் செய்யாத அடிப்புக்கு நேரிட்ட இந்த நிலை நாட்டில் இனி ஏற்படக் கூடாது. அடிப்பின் ஆன்மா சாந்தியடையவும், அதே சமயம் நாட்டின் அமைதிக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்!

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker