Latestமலேசியா

13 வயது சிறுவனால் 15 வயது சிறுமிக்கு குழந்தை: பாலியல் கல்வி கட்டாயமாக்க கோரிக்கை

ஈப்போ, டிசம்.18- பாலியல் கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. அண்மையில்  சுமார் 13 வயது சிறுவன் ஒருவன் தனது 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கி குறைமாத குழைந்தைக்கு தந்தையானதை தொடர்ந்து அவன் போலிசாரால் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் நிலையில் பாலியல் கல்வி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அச்சம்பவம் ஒட்டுமொத்த மலேசியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து, மலேசிய சிறுவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கப் பட வேண்டும் என்று பல தரப்பினர் குரல் எழுப்பியுள்ளனர்.

அந்தக் குறைமாத குழந்தையை பிரசவித்த, பள்ளியிலிருந்து வெளியேறியுள்ள அந்த 15 வயது சிறுமியை நேரில் சந்தித்த மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் லியோங் சியோக் கெங் அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள, அச்சிறுமியின் உறவினர் ஒருவர் முன்வந்துள்ளார் என்ற தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

“குழந்தை பாக்கியம் இல்லாத அந்த உறவினர், அக்குழந்தையை தத்து எடுக்கும் தனது எண்ணத்தை சமூக நல இலாகாவிடம் பகிர்ந்துள்ளார்” என்று அவர் சொன்னார்.

தான் கர்ப்பமடைந்தது குறித்து அச்சிறுமி அறியவில்லை என்றும், வயிற்று வலியால் துடித்தப் பின்னர், அவர் தங்களின் வீட்டுக் கழிவறையில் அந்தக் குறைமாத குழந்தையை அவர் பிரசவித்தார் என்ற தகவல்களும் நாளிதழ்களில் பகிரப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. அச்சம்பவம் குறித்து, அவ்விரு சிறுவர்களின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று லியோங் சியோங் சொன்னார்.

“அந்தச் சிறுமியின் தாயாரும், அவரின் 18 வயது சகோதரியும், பிரார்த்தனை பொருட்களை தயாரிக்கும் கடையில் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் தந்தை, சக்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளதால், வேலைக்குச் செல்வதில்லை” என்று அவர் கூறினார்.

விவேக கைத்தொலைபேசிகளால் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அச்சிறுவர்களின் தாயார் நம்புகிறார். “விவேக கைத்தொலைபேசிகளில், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் மற்றும் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் அவர்.

அந்தச் சிறுமி இனிமேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். அந்தச் சிறுவன், டிசம்பர் 21-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப் படுவான்.

அச்சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிகளில் பாலியல் கல்வி கட்டாயமாக வழங்கப் பட வேண்டும் என்று மாநில மகளிர், குடும்ப மேம்பாடு, சமூக நல ஆட்சிக் குழு உறுப்பினரான வோங் மே இங் அறிவுறுத்தினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker