Latestஉலகம்

காதலனை பழி வாங்கிய காதலி: 6 மில்லியன் பேர் பார்த்த – VIDEO

ஹுஸ்டன், டிசம்.19- அமெரிக்காவில் துரோகம் செய்த காதலனை பிறந்த நாள் விழாவில்கழட்டிவிடும் காதலியின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் டியானா பெரே. இவர் அண்மையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 21ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

பிறந்த நாள் விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது 5.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது

நண்பர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி  முடித்ததும்  டியானா பேச  ஆரம்பிக்கிறார். முதலில் தன்னுடைய காதலன் சாண்டேஸுக்கு நன்றி தெரிவித்தார் டியானா.

சிறிது நேரத்தில் தனக்கு அந்தக் காதலன் இழைத்த  துரோகம்   பற்றி அனைவரின் முன்னிலையில் விவரித்தார்

இதற்கு மேல் காதலுக்கு இடமில்லை என் கண்முன்னால் நிற்காதே எனக் ௐஅடுமையாக கூறி வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 5.9 மில்லியன் பேர் இதனைப் பார்த்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker