Latestஉலகம்

குழந்தைக்கு ஹிட்லர் எனப் பெயரை வைத்த தம்பதிக்கு சிறை!

லண்டன், டிசம். 19- பிரிட்டனில் நவநாஜி  இயக்கத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்களின் குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த  ஆடம் தாமஸ் மற்றும் கிளாடியா பட்டஸ் என்ற தம்பதி  நாஜி தத்துவங்களை ஆதரித்து செயல்பட்டுள்ளனர். இத்தம்பதியினர்  தங்களது  குழந்தையின் பெயரில் ஹிட்லர் என போற்றும் விதமாக பெயர் சூட்டியுள்ளனர்.

இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker