Latestஇந்தியா

சென்னையில் பிரபல ‘அஞ்சு ரூபா’ டாக்டர் காலமானர்! மக்கள் கண்ணீர் அஞ்சலி!

சென்னை, டிசம்.19 – சென்னையில் 40 வருடமாக ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘அஞ்சு ரூபா’ டாக்டர் என்று  மக்கள் மத்தியில் மக்கள் நல மருத்துவராக வலம் வந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன் (வயது 71). உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மரணம் அடைந்தார்.

அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மகள் மற்றும் இரண்டு மகன்களும் டாக்டர்களே. ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி. மகப்பேறு மருத்துவ நிபுணர். மொத்த குடும்பமும் மருத்துவத்துறை சார்ந்த குடும்பம்.

மருத்துவம் தொழில் அல்ல. அது சேவை. அந்த சேவையை ஆத்மார்த்தமாக செய்பவர்கள் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்பதை ஜெயச்சந்திரனின் மறைவு எடுத்துக்காட்டியது.

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆரம்பத்தில் வெறும் ரூ.2 மட்டுமே வசூலித்தார். அதையும் அங்குள்ள உண்டியலில் போட சொல்வார். செவிலியர்கள் நியமித்தால் அவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும் என்பதால் அவரே ஊசி போடுவது, மருந்து மாத்திரைகள் எடுத்து கொடுப்பது போன்ற வேலைகளையும் கவனித்தார்.

அவரது சேவையால் ஈர்க்கப்பட்டு பகுதிநேரமாக வந்து உதவி செய்து சென்ற செவிலியர்களும் உண்டு. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மவுசு குறைந்ததை தொடர்ந்து நோயாளிகள் வற்புறுத்தியதால் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினார். கடைசி காலம் வரை அதே கட்டணத்தையே வாங்கிவந்தார்.

இன்று அவரது மரண செய்தி அறிந்து ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker