Latestஇந்தியா

நூற்றுக்கணக்கான மான்களை கொன்ற நபருக்கு விசித்திர தண்டனை

வாஷிங்டன், டிசம்.19- அமெரிக்காவின் தெற்கு மிசூரி பகுதியில் நூற்றுக்கணக்கான மான்களை வேட்டியாடிய இளைஞருக்கு நீதிமன்றம் பாம்பி என்ற திரைப்படத்தை தொடர்ந்து பார்க்கும்படி விசித்திர தண்டனை விதித்தது.

தெற்கு மிசூரி பகுதியில் குடியிருக்கும் டேவிட் பெர்ரி என்ற இளைஞர்  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான மான்களை வேட்டையாடியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது

டேவிட் பெர்ரி அவரது சகோதரர் மற்றும் தந்தையும் இணைந்நே கடந்த 10 ஆண்டுகளாக இந்த மான் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்

அந்த வேட்டையில் பொருளாதார எதிர்பார்ப்பு இருந்தது. உண்மை தான் என்றாலும் வேட்டையாடப்படும் மான்களில் தலை மட்டுமே துண்டித்து எடுத்துச் செல்வது ஒருவகை உளவியல் பிரச்னையாக இருக்கலாம் எனவும் விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் டேவிட் பெர்ரி என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த 2 ஆண்டு காலக் கட்டத்தில் மாதம் ஒரு முறை குழந்தைகளுக்கானபாம்பிஎன்ற திரைப்படத்தை தவறாமல் கண்டுகளிக்க வேண்டும் என நீதிமன்றம் விசித்திர உத்தரவும் பிறப்பித்துள்ளது.

வேட்டைகாரர்கள் மூலம் தாயை இழந்த ஒரு மான்குட்டியின் கதையானபாம்பி‘, 1942 ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்றது  திரைப்படமாகும்.

மான் வேட்டையில் டேவிட் பெர்ரியுடன் அவரது சகோதரரும் தந்தையும் கூட ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும்தண்டனை விதிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker