Latestஇந்தியா

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஜி சாட்- 7ஏ செயற்கை கோள்

சென்னை, டிசம். 19- அதிவேக தகவல் தொடர்பு சேவைக்காக ‘ஜி சாட்- 7ஏ’ என்ற செயற்கைக் கோளை ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று விண்ணில் செலுத்தியது.

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகள் வாயிலாக செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

அதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி – எப் .1 என்ற ராக்கெட் உதவியுடன் ஜி-சாட் 7ஏ என்ற செயற்கைகோள் இன்று மாலை மணி 4.10க்கு விண்ணில் பாய்ந்தது.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அதிவேகமாக தகவல் தொடர்பு சேவை கிடைப்பதற்காக அனுப்பபடும் ஜி-சாட் 7ஏ செயற்கைகோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுள் காலம் 8 ஆண்டுகள். பாதுகாப்பு துறையின் தகவல் தொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைக் கோள் முக்கிய பங்காற்றும்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker