Latestமலேசியா

தப்பு செய்தால் ஜப்பானியர்களை போல பதவி விலகுங்கள்!- வீ கா சியோங்

கோலாலம்பூர், டிச.21- நாட்டு மக்கள் ஜப்பானியர்கள் போல் செயல்பட வேண்டும் என்று தலைவர்கள் அறிவுறுத்தும் அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் அந்த வழியை பின்பற்ற வேண்டும் என்று மசீச கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் வலியுறுத்தினார்.

ஜப்பானியர்கள் ஒழுக்கம், விடாமுயற்சி, நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரான குணங்களை கொண்டவர்கள் என்றும், மலேசியர்கள் அவர்களின் நற்குணங்களை பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

அதனைச் சுட்டிக் காட்டும் வகையில், ஜப்பானியத் தலைவர்கள், தவறுகள் மற்றும் தப்புகளை இழைத்தால், அதனை சரி செய்யும் வகையில், பதவிகளை துறப்பர் என்றும், அதேப் போன்று தப்புகளை செய்யும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள், தங்களின் பதவிகளை துறக்க வேண்டும் என்று வீ கா சியோங் அறிவுறுத்தினார்.

“ஜப்பானியர்களின் செயல்பாடுகள் மற்றும் நற்குணங்களை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறி வருகிறார். அந்த நாட்டின் தலைவர்கள் தங்களின் பதவிக் காலங்களில் தப்பேதும் செய்யும் பட்சத்தில், உடனடியாக பதவி விலகுவர் என்பதை அவர் அறிந்துள்ளாரா?” என்று வீ கா சியோங் தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்ற காரணத்திற்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதியன்று, ஜப்பானின் அப்போதைய பிரதமர் யுகியோ ஹதோயாமா பதவி விலகினார் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பதவியேற்று இன்றோடு 7 மாதக் காலம் ஆகி விட்டது. அவர்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறான வாக்குறுதிகளை அவர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை.

“மாறாக, அக்கட்சியின் தலைவர்கள் பலர், பல்வேறான தவறுகளை தொடர்ந்து செய்துக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் தொடர்ந்து தப்புகளை செய்து வருகிறார். அவர்கள் ஏன் ஜப்பானிய தலைவர்களின் செயல்களை பின்பற்றவில்லை?” என்று அவர் வினவினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker